பொது செய்தி

தமிழ்நாடு

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம்: 11 கோடி குடும்பங்களை தொடர்பு கொள்ள முடிவு

Updated : டிச 25, 2020 | Added : டிச 24, 2020
Share
Advertisement
சென்னை:''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடர்பாக, நாடு முழுவதும், நான்கு லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களை தொடர்பு கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, விஸ்வ ஹிந்து பரிஷத்தான, வி.எச்.பி.,யின் மிலிந்த் பராண்டே தெரிவித்தார்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவுடன், விஸ்வ ஹிந்து பரிஷத் இணைந்து செயல்படுகிறது.இதற்கான

சென்னை:''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடர்பாக, நாடு முழுவதும், நான்கு லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களை தொடர்பு கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, விஸ்வ ஹிந்து பரிஷத்தான, வி.எச்.பி.,யின் மிலிந்த் பராண்டே தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ராவுடன், விஸ்வ ஹிந்து பரிஷத் இணைந்து செயல்படுகிறது.இதற்கான நிகழ்ச்சிகள், நன்கொடை பெறுவது குறித்து, வி.எச்.பி., அகில உலக பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே, தமிழகத்தின் வட பகுதிக்கான மாநில தலைவர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் அளித்த பேட்டி:

அயோத்தி ராம ஜென்மபூமி குறித்த வரலாறு; தொல்லியல் உண்மைகளை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை நாம் அறிவோம். கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா, பிப்ரவரியில் அமைக்கப்பட்டது.இந்த கோவில், கோடிக்கணக்கான ஹிந்துக்களின் பக்தியின் அடையாளமாகவும், பெருமையாகவும் விளங்கும். ஐந்து கோபுரங்களுடன், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் கோவில் அமைக்கப்படுகிறது.

பல்வேறு, ஐ.ஐ.டி.,க் கள், லார்சன் அண்டு டூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கட்டட வடிவமைப்பாளர் ஷோம்புரா ஜி மற்றும் பல துறவிகள் ஆகியோர் வாயிலாக ஆலயம் அமைக்கப்படுகிறது.இந்தப் பணியில், நாடு முழுதும் உள்ள பக்தர்களும், தங்களின் பங்களிப்பை அளிக்கும் வகையில், அவர்களை தொடர்பு கொள்ள உதவும்படி, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா தரப்பு, வி.எச்.பி.,யை கேட்டுக் கொண்டது.

வி.எச்.பி.,யுடன் நாடு முழுதும் உள்ள துறவியர், மடாதிபதிகள், வைணவ ஆச்சாரியார்கள், பல்வேறு ஆன்மிக அமைப்பினர், லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் இப்பணியில் பங்கேற்றுள்ளனர்.ராம ஜென்ம பூமியில் கோவில் கட்டுமான பணி குறித்தும், வரும் பொங்கல் பண்டிகையான, ஜன., 15 முதல், மாசி பவுர்ணமியான, பிப்., 27 வரை மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.இதில், ராம ஜென்ம பூமியை மீட்பதற்காக பாடுபட்டவர்கள், உயிர் தியாகம் செய்தவர்கள் குறித்து, மக்களிடம் விளக்கப்படும்.

மேலும், கோவில் கட்டும் பணியில், பொதுமக்கள் பங்கேற்பது குறித்தும் விளக்கப்படும். மக்களிடம் இருந்து நன்கொடைகள் பெறப்படுகின்றன. இதன் வெளிப்படை தன்மைக்காக, 10, 100, 1,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள், ரசீது புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன.நன்கொடையில் முறைகேடு ஏற்படாமல் தடுக்க, ஊராட்சி, தாலுகா, மாவட்டம், மாநில அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக, நான்கு லட்சம் கிராமங்களில், 11 கோடி குடும்பங்களை தொடர்பு கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும், 15ம் தேதி நடக்க உள்ள துவக்க நிகழ்ச்சியில், பிரசித்தி பெற்றவர்கள், மடாதிபதிகள், ஆச்சாரியர்கள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நன்கொடையை அனுப்ப வசதிகள்கோவில் கட்டுமானத்திற்கு, 'டிராப்ட், செக்' வாயிலாக நன்கொடை அளிப்போர், Shri Ram Janmabhoomi teeth kshetra' என்ற பெயரில், State Bank of India, Nayaghat, Ayodhya - -224 123, U.P., என்ற முகவரிக்கு அனுப்பலாம்.நன்கொடைகளை, 'ஆன்-லைன்' வாயிலாக அனுப்புவதற்கான வங்கி விவரம்: சேமிப்பு கணக்கு- - 39161495808; நடப்புக் கணக்கு - 39161498809, ஐ.எப்.எஸ்.சி., கோடு - -SBIN0002510, PAN No: AAZTS6197B.மேலும், தகவல்களுக்கு, contact@srjbtkshetra.org என்ற, இ- மெயில்; https://srjbtkshetra.org என்ற, இணையதள முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X