உடுமலை:புதிய வயது வந்தோர் கல்வித்திட்டத்தில், உடுமலை வட்டார மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.ஒவ்வொரு வட்டாரத்திலும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு அருகிலுள்ள, 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி கற்பிக்க, புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.அங்கன்வாடி மையங்கள் மற்றும் வேலை உறுதி திட்டத்தில், பராமரிக்கப்படும் மக்கள் தொகை பட்டியல்களை பயன்படுத்தி, பட்டியல் தயார்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, உடுமலை வட்டாரத்தில், ஒவ்வொரு பகுதிகளிலும் குறைந்த பட்சம், 20 பேர் என்ற எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உடுமலையில், 50 மையங்கள் அமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவர்களுக்கான கற்பித்தல் நேரம், பள்ளி வேலை நாட்களில், நாள்தோறும், இரண்டு மணி நேரமாக ஒதுக்கப்படுகிறது.இத்திட்டம் கடந்த 13ம் தேதி முதல், முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடுமலையில், திட்டத்துக்கு மக்கள் வரவேற்பு அளிப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: தன்னார்வலர்கள் முதற்கட்டமாக, கற்போரின் இடத்துக்குச்சென்று, அடிப்படைக்கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் பின்னர், இப்போது, கற்போர், ஆர்வத்துடன் கற்போர் மையத்துக்கு வருகின்றனர். ஆனால், பெரும்பான்மையானோர், காலை நேரங்களில் வேலை உறுதி திட்டம், விவசாயப்பணிகளுக்கு சென்றுவிடுவதால், மாலையில் கற்கவே விரும்புகின்றனர். இதற்கேற்ப தன்னார்வலர்களும், நேரத்தை அமைத்து, அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கின்றனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE