உடுமலை:பயிர் காப்பீட்டு திட்டத்தில், அறுவடை பரிசோதனைகளை ஒருங்கிணைக்க, தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் அறுவடை பரிசோதனைகளை ஒருங்கிணைக்க, தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.அதாவது, ஒப்பந்த அடிப்படையில், 2021ல், மார்ச் 31 வரை பணிபுரிய இருவர், தேர்வு முகமையால் பணி அமர்த்தப்படவுள்ளனர். அதற்கான, பணித்தேர்வு முகமை பதிவுத்துறை வாயிலாக பதிவு செய்திருக்க வேண்டும். பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில், குறைந்தபட்சம், 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக தேர்வு செய்து, வழங்க வேண்டும். எனவே வரும், 28ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், விபரங்களை ஒப்படைக்க வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE