சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொழிலுக்கு அடிமையான சிறுமி மீட்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
மதுரை:பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட, 16 வயது சிறுமி மீட்கப்பட்டார். இருப்பினும், அவர் அதிலிருந்து மீள முடியாமல் அடிமையாகி உள்ளார். மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், ஹிந்து மதத்தை சேர்ந்தவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.அடுத்தடுத்து, ஆறு பிள்ளைகள் பிறந்தன. இதில், நான்காவது பிள்ளை, 16 வயது சிறுமி.சிறுமிக்கு, 10 வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட,

மதுரை:பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட, 16 வயது சிறுமி மீட்கப்பட்டார். இருப்பினும், அவர் அதிலிருந்து மீள முடியாமல் அடிமையாகி உள்ளார்.

மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், ஹிந்து மதத்தை சேர்ந்தவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.அடுத்தடுத்து, ஆறு பிள்ளைகள் பிறந்தன. இதில், நான்காவது பிள்ளை, 16 வயது சிறுமி.சிறுமிக்கு, 10 வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட, பிள்ளைகளை பராமரிக்க தாய் சிரமப்பட்டார்.

கணவரின் தங்கையான ஜெயலட்சுமி, 'என் பொறுப்பில் சிறுமியை வளர்க்கிறேன்' எனக் கூறி, இரண்டு ஆண்டுகளாக வளர்த்தார். சிறுமி பூப்பெய்தியதும், அவரை தன் தொழிலான பாலியல் தொழிலுக்கு அழைத்துச் சென்றார். பணம் கிடைத்ததால், சிறுமியும் அடிமையாகி விட்டார்.

இச்சூழலில்தான், மதுரையில் பாலியல் தொழிலில், முக்கிய புள்ளிகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயலட்சுமி உட்பட ஆறு பேரை, நேற்று முன்தினம், விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலா தலைமையிலான போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்த போது, தான் செய்து வந்தது தவறான தொழில் என்று குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாததை கண்டு, போலீசார் வேதனை அடைந்தனர்.பாலியலுக்கு அடிமையானவர் போன்ற மனநிலையில் இருக்கும் சிறுமியை, ஒரு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து, அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X