பொள்ளாச்சி:மழை காலத்தில் விளை நிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்டுவது குறித்து, வேளாண் துறை பரிந்துரை அளித்துள்ளது.வடகிழக்கு பருவமழை பெய்து ஓய்ந்துள்ள சமயத்தில், மழையால் விளை நிலத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். அவற்றை ஈடுகட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வேளாண் அலுவலர் துளசிமணி பரிந்துரை அளித்துள்ளார்.நிலத்தில் மழையால் வெளியேறும் உரத்தின் இழப்பை ஈடுகட்ட, பயிர்களுக்கு நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இடவேண்டும். தென்னந்தோப்புகளுக்கும் இந்த வழிமுறையை கடைப்பிடிக்கலாம். பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலை செடிகளில் வேர் அழுகல் நோய் தென்பட்டால், கார்பன்டைசிம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.நிலக்கடலை பயிரின் இலை மஞ்சள் நிறமாகத் காணப்பட்டால், ஒரு சதவீதம் யூரியா கரைசல் அல்லது 'ஆல் நைன்டீன்' எனப்படும், 19:19:19 கலப்பு உரக்கரைசலை தெளிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE