பொள்ளாச்சி:குள்ளக்காபாளையம் ஐயப்பன் கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, 24 மணி நேர அகண்ட நாம பஜனை செய்யப்பட்டது.ஆண்டில் மார்கழி மாதம், இறைவனின் மாதம் எனவும், ஆண்டின் பிரம்ம முகூர்த்த காலம் எனவும் போற்றப்படுகிறது. இதையொட்டி, ஆன்மிக ஆர்வலர்கள், மார்கழி மாதம் முழுக்க அதிகாலையில், இறைவனை போற்றி பஜனை பாடுவது வழக்கம். குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், மார்கழியை முன்னிட்டு, தொடர்ந்து, 24 மணி நேர பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.கடந்த, 24ம் தேதி காலை, 5:00 மணிக்கு துவங்கி, இன்று (25ம் தேதி) அதிகாலை, 5:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒரு பஜனை குழு என, எட்டு குழுவினர் இதில் பங்கேற்கின்றனர்.கோவை சித்தாபுதுார் பஜனை குழுவினரில் துவங்கி, பழனிக்கவுண்டன்புதுார் விஷ்ணு கோவில் குழு, ஐயப்பன் கோவில் பக்தர்களின் மகளிர் அணி, இளைஞர் சேவா அணி, சவுடேஸ்வரி இளைஞர் நலச்சங்கம், சபரிமலை யாத்திரைக்குழு, ஹரிகந்த பஜனைக் குழுவினரில் இரண்டு பிரிவினர் என தொடர்ந்து, 24 மணி நேரம் இறைவனின் நாமத்தை மையப்படுத்தி, பஜனை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்திருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE