திருநெல்வேலி:-பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளராக திகழ்ந்த பேராசிரியர் தொ.பரமசிவன் காலமானார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் தொ.பரமசிவன், 69; காரைக்குடி அழகப்பா கல்லுாரியில், முதுகலை தமிழ் பயின்றவர். மதுரை பல்கலையில், இவரது முனைவர் பட்ட ஆய்வேடான, 'அழகர்கோவில்' ஆய்வுகளுக்கான முன்னோடி நுால். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறை தலைவராக, 1998 - 2008 வரை பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். அறியப்படாத தமிழகம், சமயங்களின் அரசியல் உட்பட, 20க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். சிறந்த பேச்சாளர்.
சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை காலமானார். இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. தசாவதாரம் உள்ளிட்ட படங்களுக்காக நடிகர் கமல், இவரது வீட்டிற்கு வந்து ஆலோசனைகள் பெற்றுள்ளார்.'தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது அடங்காத் துயரம்' என, 'டுவிட்டரில்' கமல் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE