திருச்சி:விதிமுறைகளை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்திய, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு உட்பட, 2,000 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம், 29 இடங்களில், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற கோரிக்கையுடன், கிராமசபைக் கூட்டங்கள் நடந்தன.லால்குடி, பெருவளநல்லுாரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், தி.மு.க., முதன்மை செயலரும், முன்னாள் அமைச்சருமான நேரு பங்கேற்றார்.
இதேபோல், திருச்சி மாவட்டத்தில் உள்ள, ஒன்பது சட்டசபை தொகுதிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடந்தன.தளர்வுடன் கூடிய கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தி.மு.க.,வினர் விதிமுறைகளை மீறி கிராம சபைக் கூட்டங்களை நடத்தி உள்ளனர். இதுகுறித்து, 29 பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், போலீசில் புகார் அளித்தனர்.
இதன்படி, கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் நேரு, மாவட்டச் செயலர் தியாகராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் வைரமணி, மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார் உட்பட, 2,000க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE