அரசியல் செய்தி

தமிழ்நாடு

எஸ்ரா சற்குணம் மீது பா.ஜ., குற்றச்சாட்டு

Added : டிச 25, 2020
Share
Advertisement
மதுரை:''பேராயர் எஸ்ரா சற்குணம், மதநல்லிணக்கத்தை குலைக்க முயற்சிக்கிறார்,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி மாநில செயலர் கல்வாரி தியாகராஜன் குற்றம்சாட்டினார்.சென்னையில், தி.மு.க., உண்ணாவிரத போராட்டத்தில், ஹிந்துகளுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை தரக்குறைவாகவும் பேசிய பேராயர் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோரி, மதுரை எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ.,

மதுரை:''பேராயர் எஸ்ரா சற்குணம், மதநல்லிணக்கத்தை குலைக்க முயற்சிக்கிறார்,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி மாநில செயலர் கல்வாரி தியாகராஜன் குற்றம்சாட்டினார்.

சென்னையில், தி.மு.க., உண்ணாவிரத போராட்டத்தில், ஹிந்துகளுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை தரக்குறைவாகவும் பேசிய பேராயர் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோரி, மதுரை எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ., சிறுபான்மையினர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், எஸ்ரா சற்குணம் மத துவேஷத்தை துாண்டும் வகையிலும், அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில், மத கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலும், ஹிந்துக்கள் முகத்தில் இரண்டு குத்து குத்த வேண்டும்; ரத்தம் வர வேண்டும் என பேசியுள்ளார்.பிரதமர் மோடியை ஒருமையிலும், மரியாதை குறைவாகவும் பேசியுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில செயலர், கல்வாரி தியாகராஜன் கூறியதாவது:பிரதமர் மோடி செயல்படுத்தி வரும் திட்டங்களால் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர் அதிகமானோர் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில், அமைதியை சீர்குலைக்க எஸ்ரா சற்குணம் முயற்சிக்கிறார்.அதன் மூலம் சிறுபான்மையினரை போராட துாண்டுகிறார். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X