பொள்ளாச்சி:பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டில், தக்காளி 15 கிலோ கூடைக்கு, 50 ரூபாய் விலை உயர்ந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டில் ஏலம் விடப்படுகின்றன. நேற்றைய காய்கறி மார்க்கெட் நிலவரப்படி, 15 கிலோ எடை கொண்ட தக்காளி கூடை, 250 ரூபாய்க்கு விற்பனையானது.வெண்டைக்காய் கிலோ - 30, அவரைக்காய் - 40, கொத்தமல்லி கிலோ - 25, பாகற்காய் - 25, புடலங்காய் - 15, பீர்க்கங்காய் - 23, கத்தரிக்காய் (வெள்ளை) - 50, கத்தரி (பச்சை) - 25 ரூபாய்க்கும் விற்பனையானது.வாரத்துவக்கத்தில், தக்காளி கூடை - 200 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 50 ரூபாய் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கத்தரிக்காய் - 40, அவரைக்காய் - 30, வெண்டைக்காய் - 20 ரூபாய்க்கும் விற்றது. வரத்து குறைவு, பற்றாக்குறை காரணமாக, அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு, 10 ரூபாய் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE