பொது செய்தி

தமிழ்நாடு

இன்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி

Added : டிச 25, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா இன்றுநடக்கிறது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, மூலவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவ
 இன்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா இன்றுநடக்கிறது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, மூலவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவ மூர்த்திக்கு மோகினி அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன. இன்று அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை, சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளி பின்பற்றி விழாவில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா காலை, 4:30 மணிக்கு மேல், 5:30 மணிக்குள் நடக்கிறது.பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவில், மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.உடுமலைவைகுண்ட ஏகாதசியையொட்டி, உடுமலைசவுந்திரராஜ பெருமாள் கோவிலில், இன்று காலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று இக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X