பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி

Added : டிச 25, 2020
Share
Advertisement
உடுமலை:திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு, சுற்றுலா பயணிகள் இன்று முதல் அனுமதிக்கப்படுவர், என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.உடுமலை அருகே, திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், மலைமேல் பஞ்சலிங்கம் அருவி மற்றும் அணை, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் என, ஆன்மிகம் மற்றும்
 பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி

உடுமலை:திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு, சுற்றுலா பயணிகள் இன்று முதல் அனுமதிக்கப்படுவர், என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.உடுமலை அருகே, திருமூர்த்திமலையில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், மலைமேல் பஞ்சலிங்கம் அருவி மற்றும் அணை, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் என, ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் முதல், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வு காரணமாக, கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த, 14ம் தேதி முதல், சுற்றுலா மையங்கள், பாதுகாப்பு அம்சங்களுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால், பருவ மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்ததால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில், தற்போது அருவியில் நீர் விழுவது சீராகியுள்ளதால், 9 மாதத்திற்கு பின், இன்று முதல் பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.கோவில் அதிகாரிகள் கூறுகையில், 'அரசு வழிகாட்டுதல்படி, இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X