ராமநாதபுரம்:உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் அர்ஜென்டினாவை சேர்ந்த மாரடோனாவை நினைவு கூறும் வகையில் ராமநாதபுரம் பேக்கரியில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி கால்பந்துடன் மாரடோனாவின் 6 அடி உயர கேக் செய்து வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் பாரதிநகர்ஐஸ்வர்யா பேக்கரி உரிமையாளர் வெங்கட சுப்பு கூறியதாவது: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பேக்கரியில் கேக் சிலை செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறோம். கடந்த ஆண்டுகளில் பாரதியார், இளையராஜா உருவ கேக் செய்து வைத்திருந்தோம்.
இந்த ஆண்டு அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் மாரடோனாவை நினைவு கூறும் வகையில், அவர் பந்தை லாவகமாக கடத்தி செல்வது போன்ற அவரது உருவ கேக் வடிவமைத்தோம். கால்பந்து என்றாலே மாரடோனா தான் அனைவரின் நினைவிற்கும் வரும்.சென்ற மாதம் இறந்த அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இளைஞர்கள் அலைபேசி, வீடியோ கேம்களில் பொழுதை வீணடிக்காமல் அவர் போன்று களத்தில் இறங்கி விளையாட வலியுறுத்தியும் இந்த கேக் சிலையை செய்துள்ளோம்.
இந்த சிலை 6 அடி உயரத்தில் 60 கிலோ சர்க்கரை, 270 முட்டைகளைக்கொண்டு 65 கிலோவில் நான்கு நாட்களில் உருவாக்கப்பட்டது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE