பொது செய்தி

தமிழ்நாடு

பேராயர் எஸ்றா சற்குணத்தை கைது செய்க: அர்ஜூன் சம்பத்

Added : டிச 25, 2020
Share
Advertisement
வடமதுரை:''மதக்கலவரத்தை துாண்டும் வகையில் பேசுகிற பேராயர் எஸ்றா சற்குணத்தை கைது செய்ய வேண்டும்,'' என ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராளிபட்டியில் நடந்த வேடசந்துார் தொகுதி ஹிந்து மக்கள் கட்சியின் தேர்தல் கலந்தாய்வு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஹிந்து

வடமதுரை:''மதக்கலவரத்தை துாண்டும் வகையில் பேசுகிற பேராயர் எஸ்றா சற்குணத்தை கைது செய்ய வேண்டும்,'' என ஹிந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராளிபட்டியில் நடந்த வேடசந்துார் தொகுதி ஹிந்து மக்கள் கட்சியின் தேர்தல் கலந்தாய்வு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஹிந்து மக்கள் கட்சி போட்டியிடும். ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றி பெறும். பா.ஜ., உள்ளிட்ட யாருடைய முகமூடியாகவோ, 'பி' டீம் ஆகவோ ரஜினி செயல்படமாட்டார்.

வடமதுரையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பக்த ஆஞ்சநேயர் கோயில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காமல் உள்ளது. இங்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X