ஓசூர்:கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு மக்கள் எதிர்ப்பால் 'வாபஸ்' பெறப்பட்டது.
பிரிட்டனில் அதிக வீரியத்துடன் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கர்நாடகா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என நேற்று முன்தினம் அறிவித்தது. ஜன 2 வரை கடைப்பிடிக்கப் படும் எனவும் தெரிவித்தது.
பின்னர் நேரம் மாற்றப்பட்டு இரவு 11:00 முதல் காலை 5:00 மணி வரை என குறைக்கப்பட்டது. தனியார் வாகனங்கள் தவிர பஸ்கள் ஆட்டோக்கள் இயங்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.ஊரடங்கு என கூறி விட்டு வாகனங்கள் இயங்க அனுமதி அளித்ததால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் இரவு நேர ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் முதல்வர் எடியூரப்பா அமைச்சர்கள் மற்றும் அரசு மூத்த அதிகாரிகள் நிபுணர் குழுவுடன் ஆலோசித்து இரவு நேர ஊரடங்கை 'வாபஸ்' பெறுவதாக அறிவித்தார். தமிழக அரசு பஸ்கள் வழக்கம் போல் கர்நாடகாவுக்கு சென்று வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE