பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளின் வாடகை பிரச்னை தொடருது! தொகையை குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

Added : டிச 25, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;நகராட்சி கடைகளின் வாடகை பிரச்னைக்கு சரியான தீர்வு ஏற்படாததால், மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ளது.மேட்டுப்பாளையத்தில், நகராட்சிக்கு சொந்தமாக, 250க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஐந்தாண்டுக்கு முன், இக்கடைகளின் குறைந்தபட்ச வாடகை, 2,300 ரூபாயாகவும், அதிகபட்ச வாடகை, 9 ஆயிரம் ரூபாயாகவும்

மேட்டுப்பாளையம்;நகராட்சி கடைகளின் வாடகை பிரச்னைக்கு சரியான தீர்வு ஏற்படாததால், மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ளது.மேட்டுப்பாளையத்தில், நகராட்சிக்கு சொந்தமாக, 250க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஐந்தாண்டுக்கு முன், இக்கடைகளின் குறைந்தபட்ச வாடகை, 2,300 ரூபாயாகவும், அதிகபட்ச வாடகை, 9 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, 15 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டது. இந்த வாடகையை வியாபாரிகள் செலுத்தி வந்தனர். இந்நிலையில், ஐந்தாண்டுக்கு முன், அப்போது இருந்த நகராட்சி நிர்வாகம், சில கடைகளை பொது ஏலத்தில் விட்டதில், அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. அதை அடிப்படையாக வைத்து, மற்ற கடைகளுக்கும் வாடகை உயர்த்தப்பட்டது. இதனால், 2,500 ரூபாயாக இருந்த கடை வாடகை, வரி உட்பட, 11 ஆயிரத்து 150 ஆகவும், 9 ஆயிரம் ரூபாயாக இருந்த கடை வாடகை, 49,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.வியாபாரிகள் இந்த வாடகைக்கு ஒப்புக் கொண்டு ஓராண்டு வாடகை செலுத்தினர். அதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக வியாபாரிகள் ஒன்று சேர்ந்து, வாடகை செலுத்த மறுக்கின்றனர். 'அதிகப்படியான வாடகையை செலுத்த முடியவில்லை' என்றும், வாடகையை குறைக்கும்படி கோரியும், தமிழக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வருகின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், 'வாடகை பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாடகை செலுத்தி வந்தோம். சரியான வியாபாரம் இல்லாததால், வாடகை செலுத்த முடியவில்லை. குறைக்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது நகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வியாபாரிகள், 1.25 கோடி ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தியுள்ளோம். இந்நிலையில், மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,' என்றனர்.நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் கூறுகையில், ''வியாபாரிகள், 7 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். பலமுறை வாடகையை செலுத்தும்படி கூறியபோதும், செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். நோட்டீஸ் அனுப்பிய உடன் வாடகையை செலுத்தினர். டி.எஸ்.பி., தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், 20 சதவீதம் வாடகை செலுத்துவதாக ஒப்புக் கொண்டனர். ஆனாலும் பல வியாபாரிகள், 10 சதவீதம் வாடகை பாக்கி மட்டும் செலுத்தியுள்ளனர். நகராட்சி பணியாளர்களுக்கு, ஒரு மாத சம்பளம், ஒரு கோடி ரூபாய் தர வேண்டியிருக்கிறது. அதனால் வியாபாரிகள், வாடகை பாக்கியை முறையாக செலுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X