அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம், அன்னுார், பெரியநாயக்கன்பாளைம், மேட்டுப்பாளையம், சூலுார் பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது.அன்னுார் நகரில், அ.தி.மு.க., நகரச் செயலாளர் சவுகத் அலி தலைமையில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு, மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அமுல் கந்தசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி உட்பட நகர, ஒன்றிய
 எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம், அன்னுார், பெரியநாயக்கன்பாளைம், மேட்டுப்பாளையம், சூலுார் பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது.அன்னுார் நகரில், அ.தி.மு.க., நகரச் செயலாளர் சவுகத் அலி தலைமையில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு, மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அமுல் கந்தசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி உட்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.* தெற்கு ஒன்றியம் சார்பில், குப்பேபாளையத்தில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் தலைமையில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஊராட்சி தலைவர் சாந்தி அருண், மாணவரணி மாவட்ட செயலாளர் கோகுல் குமார், ஐ.டி., அணி மாவட்ட இணை செயலாளர் பிரபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.* கஞ்சப்பள்ளியில், அ.தி.மு.க., ஒன்றிய இணைச் செயலாளர் சித்ரா சுப்பிரமணியம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.குட்டை புதூரில் நிர்வாகி ஆறுமுகம் தலைமையில், அஞ்சலி செலுத்தப்பட்டது.* அ.ம.மு.க., சார்பில், அன்னுார் கைகாட்டியில், நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமையில், அஞ்சலி செலுத்தப்பட்டது. அவைத்தலைவர் மதிவாணன், ஒன்றிய இணைச் செயலாளர்கள் முகமது அஜீம், ராஜாமணி, தகவல் தொழில்நுட்ப செயலாளர் அங்கமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.* கோவில்பாளையத்தில், எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தலைமையில், எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அ.தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அருண்குமார், நகர செயலாளர் தேவராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.* எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றியத்தில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுகுமார் தலைமையில், நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் கவிதா சண்முகசுந்தரம், ஊராட்சி தலைவர்கள் சுபத்ரா புருஷோத்தமன், கோவிந்தராஜ், ஆகியோர் பங்கேற்றனர்.* சூலுார், கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை பகுதியில் அ.தி.மு.க., வினரால் அனுசரிக்கப்பட்டது. சூலுாரில், எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமையில், மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இருகூரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.மாவட்ட சேர்மன் சாந்திமதி, ஒன்றிய செயலாளர்கள் குமாரவேல், கந்தவேல், சூலுார் நகர செயலாளர் கார்த்திகைவேலன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.* பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த அன்னதானத்தை, கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண்குமார் துவக்கி வைத்தார். நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் எம்.ஜி.ஆர்., உருவப்படம் வைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதே போல, சின்னதடாகம், துடியலுார், கூடலுார் கவுண்டம்பாளையம், குமரபுரம் உட்பட பகுதிகளில், அ.தி.மு.க., வினர் அஞ்சலி செலுத்தினர்.* சிறுமுகை பேரூராட்சியில் மவுன ஊர்வலம் நடந்தது. முன்னாள் எம்.பி., செல்வராஜ், எம்.ஜி.ஆர்., புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மவுன ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மவுன ஊர்வலம், தியேட்டர் மேடு வரை வந்தது. அங்கு எம்.ஜி.ஆர்., புகைப்படத்துக்கு மாலை அணிவித்து, அ.தி.மு.க.,வினர் மலரஞ்சலி செலுத்தினர்.பேரூராட்சி செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பொன்னுசாமி, ஜெ., பேரவை செயலாளர் நாசர், மகளிர் அணி செயலாளர் விமலா, காரமடை ஒன்றிய சேர்மன் மணிமேகலை உட்பட, பலர் பங்கேற்றனர்.* மேட்டுப்பாளையத்தில் நடந்த நினைவு தினத்தில், நகர செயலாளர் வான்மதி சேட் தலைமையில், ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். -நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X