பொது செய்தி

தமிழ்நாடு

பணிகளை சீக்கிரம் முடிக்கணும்! ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை

Added : டிச 25, 2020
Share
Advertisement
சூலுார்:அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க, சூலூர் யூனியன் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.சூலுார் யூனியன் அலுவலகத்தில், சேர்மன் மாதப்பூர் பாலு தலைமையில், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் ஷீலா, சுப்புலட்சுமி முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலர்கள், மண்டல மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,

சூலுார்:அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க, சூலூர் யூனியன் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.சூலுார் யூனியன் அலுவலகத்தில், சேர்மன் மாதப்பூர் பாலு தலைமையில், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் ஷீலா, சுப்புலட்சுமி முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலர்கள், மண்டல மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள் பங்கேற்றனர். அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனோ பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வரவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக, முழுமையாக செயல்படுத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன. பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க, தகுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.எம்.பி., - எம்.எல்.ஏ., வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளும் பணிகள், பசுமை வீடுகள், 2020-21 திட்டத்தில் நடக்கும்பணிகளை மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கவேண்டும், 100நாள் வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, கூடுதல் பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X