மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே குடியிருப்பு பகுதிக்குள், நான்கு காட்டு யானைகள் நுழைந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.சிறுமுகை வனப்பகுதியில் உலவும் யானைகள், தண்ணீர் குடிக்க, இரவில் பவானி ஆற்றுக்கு வந்து செல்கின்றன. சில நேரங்களில், விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் வனப்பகுதி ஓரத்தில் உள்ள நிலங்களில், விவசாயிகள், இரவில் யானை காவலுக்கு இருந்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஒரு குட்டியுடன், நான்கு யானைகள், சிறுமுகை வனச்சரகம், வேடர் காலனி பகுதியில் இருந்து, பவானி ஆற்றை கடந்து, வீராசாமி நகர் குடியிருப்பு பகுதிக்கு விடியற்காலை வந்தன. இதைக்கண்ட இப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். பின், பொதுமக்கள் திரண்டு சப்தமிட்டதால், யானைகள், அருகே உள்ள தனியார் கம்பெனி வளாகத்தில், மரங்கள் நிறைந்த பகுதிக்கு சென்றுவிட்டன.தகவலறிந்த சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள், வீராசாமி நகர் பகுதிக்கு சென்று, யானைகள் இருக்கும் இடத்தை கண்டறிந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனத்துக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE