பொது செய்தி

தமிழ்நாடு

சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளூர் மக்கள் எதிர்ப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
கருமத்தம்பட்டி:கணியூர் சுங்கசாவடியில் உள்ளூர் வாகன ஒட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கருமத்தம்பட்டி அடுத்த கணியூரில் சுங்கச்சாவடி உள்ளது. இவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிக்கு, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனால், அரசூர்,

கருமத்தம்பட்டி:கணியூர் சுங்கசாவடியில் உள்ளூர் வாகன ஒட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கருமத்தம்பட்டி அடுத்த கணியூரில் சுங்கச்சாவடி உள்ளது. இவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிக்கு, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனால், அரசூர், கணியூர், கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வாகன ஓட்டிகள் பயனடைந்து வந்தனர். நேற்று முன்தினம், உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் கட்ட கூறி, ஊழியர்கள் தகராறு செய்துள்ளனர். இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று, அலுவலர்களுடன் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.கணியூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி கூறுகையில், ''உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது. தனியாக அடையாள அட்டை வழங்க வேண்டும். உள்ளூர் வாகனங்களுக்கு என, தனி வழி வேண்டும் என, சுங்கச்சாவடி அலுவலர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X