சூலுார்:மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு, இடுபொருட்கள் தொகுப்பு தோட்டக்கலைத்துறை வாயிலாக வழங்கப்படுகிறது.சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி அறிக்கை:தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வீட்டு காய்கறித்தோட்டம் அமைக்க இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு, மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஒரு கிட்டில், தென்னை நார் கழிவு கட்டிகள் ஆறு, பாலித்தீன் பைகள் ஆறு, வெண்டை, கத்தரி, அவரை, கீரை, கொத்தவரை விதை பாக்கெட்கள் ஆறு மற்றும் நுண்ணுயிர் உரங்கள், விளக்க கையேடு ஆகியவை இருக்கும். ஒரு கிட்டின் விலை, ரூ.850. இதில், அரசு மானியம், ரூ.340 தருகிறது. ரூ. 510 செலுத்தி கிட் பெற்று செல்லலாம். 'கிட்' வாங்குபவர்கள் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும். ஒருவருக்கு தினமும், 300 கிராம் காய்கறிகள் தேவைப்படுகிறது. இதில், கீரைகள் 125 கிராம், 300 கிராம் காய்கறிகள், 75 கிராம் இதர காய்கறிகள் ஆகும். நமக்கு தேவையான காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில், மாடித்தோட்டத்தில் விளைவித்து பயன்பெறலாம்.காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கும், 'கிட்' வாங்கவும், சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து பயன்பெறலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE