மேட்டுப்பாளையம்:காரமடை அருகே காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 3.60 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர்.காரமடை அருகே காளம்பாளையத்தில், காளத்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 18.23 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்த இடத்தை பல ஆண்டுகளாக, பலர் ஆக்கிரமிப்பு செய்து உபயோகப்படுத்தி வந்தனர். இந்த இடத்தை மீட்க கோரி, அப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில், கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி, பரம்பரை அறங்காவலர் ஜெயபாலசுப்பிரமணியம், கோவில்களின் செயல் அலுவலர்கள் கைலாஷ், ராமஜோதி, குமுதவல்லி, சங்கர், வளர்மதி, ஆய்வாளர் சரண்யா, காளம்பாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர், ஆக்கிரமிப்பு செய்திருந்த, 3.60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE