திருப்பூர்:கோல்டன் நகர் பகுதியில் உரிய 'டிஸ்போஸபிள் பாயின்ட்' இன்றி, கழிவு நீர் ரோட்டில் சென்று தேங்கி நிற்கிறது. இதனால் ரோடு முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.திருப்பூர் மாநகராட்சி 23 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி கோல்டன் நகர். ஆயிரக்கணக்கான வீடுகள் நிறைந்த பகுதி. ஏராளமான கடைகள், பனியன் நிறுவனங்களும் உள்ளன.இப்பகுதியில் உள்ள தங்க மாரியம்மன் கோவில் சுற்றுப்பகுதியில் உள்ள பல வீதிகளில் ஏராளமான வீடுகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் உரிய முறையில் வெளியேற வசதியில்லை. நீண்ட காலமாக கோல்டன் நகர் பகுதி கழிவு நீர், பாப்பநாயக்கன்புதுார் செல்லும் ரோட்டை கடந்து செல்லும் வகையில் கட்டமைப்பு இருந்தது.தாழ்வாக பகுதியில் உள்ள தனியார் நிலங்களில் இந்த கழிவு நீர் பெரும் குட்டை போல் தேங்கி நிற்பது வழக்கம். மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தப்பட்ட இந்த இடம் கழிவு நீர் தேங்கியதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், நில உரிமையாளர்கள் கழிவுநீர் சென்று தேங்குவதை தடுக்கும் வகையில் தங்கள் இடத்தை பாதுகாப்பு செய்தனர். இதனால், கழிவுநீர் சென்று தேங்க வழியில்லாத நிலை ஏற்பட்டது. கால்வாயில் பெருக்கெடுத்த கழிவுநீர் பாப்பநாயக்கன்புதுார் செல்லும் ரோட்டில் சென்று தற்போது, குளம் போல் தேங்கி நிற்கிறது.மண்ணரை பகுதியிலிருந்து பாப்பநாயக்கன்புதுார், கவுண்டநாயக்கன்புதுார் செல்லும் வகையில் உள்ள இந்த ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரோட்டில் கழிவு நீர் அதிகளவில் தேங்கி நிற்பதால் இதை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE