புதுடில்லி :சட்டக் கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒரு மாதத்துக்குள் நியமிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:நாட்டின், 21வது சட்டக் கமிஷனின் பதவிக்காலம், 2018, ஆக., 31ல் முடிவுக்கு வந்தது. ஆனால், அதற்கான பணிக்காலமோ, தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலமோ நீட்டிக்கப்படவில்லை.
![]()
|
இந்நிலையில், 22வது சட்டக் கமிஷனை அமைப்பதற்கான அறிவிப்பு, இந்தாண்டு, பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இதுவரை, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. ஒரு மாதத்துக்குள் இந்த நியமனங்களைச் செய்ய, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் அல்லது சட்டக் கமிஷனுக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து அளித்து, நீதிமன்றமே இந்த நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE