பொது செய்தி

தமிழ்நாடு

நூல் கொள்முதல் பிரச்னை... என்ன தான் நடக்கிறது?

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020
Share
Advertisement
கொரோனா பாதிப்புகளிலிருந்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை, மீண்டும் வளர்ச்சியை நோக்கி திரும்பிவருகிறது. வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் வரத்துவங்கிஉள்ளன.இதனால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின், மூலப்பொருளான நுால் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தமிழக நுாற்பாலைகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு நுால்
 நூல் கொள்முதல் பிரச்னை...  என்ன தான் நடக்கிறது?

கொரோனா பாதிப்புகளிலிருந்து திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை, மீண்டும் வளர்ச்சியை நோக்கி திரும்பிவருகிறது. வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் வரத்துவங்கிஉள்ளன.இதனால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின், மூலப்பொருளான நுால் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தமிழக நுாற்பாலைகள், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு நுால் வழங்குவதில்லை; ஏற்றுமதியில் முழு கவனம் செலுத்துகின்றன. கடனுக்கு நுால் வழங்கு வதில்லை என, திருப்பூர் பகுதி பின்னலாடை துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.'நுால் அதிகமாக வாங்கி 'ஸ்டாக்' வைக்கின்றனர், இப்போதுதான், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பணம் கொடுக்க இழுத்தடிக்கின்றனர்,' என ஒவ்வொரு துறையினரும் தங்களது தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றனர். உண்மையில், நுால் பிரச்னையில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து, உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், நுாற்பாலையினர் கூறுவது என்ன?உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:உடனடியாக தொகை கிடைப்பதாலும், கூடுதல் விலையாலும், தமிழக நுாற்பாலைகள், நுால் ஏற்றுமதியில் மட்டுமே முழு கவனம் செலுத்துகின்றன. திருப்பூரில் இயங்கும், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, நுால் வழங்குவது இல்லை.முப்பது முதல் 90 நாட்கள் கடனுக்கு, நுால் வழங்குவதை நுாற்பாலைகள் வழக்கமாக கொண்டிருந்தன. தற்போது, உடனடியாக தொகை வழங்கினாலும், நுால் இல்லை என்கின்றனர்.நுால் வர்த்தகர்களிடம் கேட்டாலும், 'நுாற்பாலைகள் எங்களுக்கும் நுால் வழங்குவதில்லை' என்கிற பதில்தான் வருகிறது. இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஆடை தயாரிப்புக்கு மூலப்பொருள் இன்றி, தவிக்கின்றன.பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கும், 500 பை (ஒரு பை - 60 கிலோ) தேவையென்றால், வெறும் 30 பை மட்டுமே நுால் கிடைக்கிறது. நுாற்பாலைகளின் இந்த நிலைப்பாட்டால், நிட்டிங், டையிங், பிரின்டிங் என, அனைத்துவகை நிறுவனங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.தற்போது உருவாகியுள்ள இந்த அசாதாரண சூழல் குறித்து, பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள் குரல் எழுப்பாமல் அமைதி காப்பது கவலை அளிக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், ஒட்டுமொத்த பின்னலாடை துறையும் வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்பு கூட உருவாகி விடும். தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நுாற்பாலை உரிமையாளர்கள் கூறியதாவது:திருப்பூர் உட்பட நாடுமுழுவதும் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, அதிகளவு ஆர்டர் கிடைத்துள்ளது. அன்றைய தேவைக்கு ஏற்ப, படிப்படியாக கொள்முதல் செய்யும் ஆடை உற்பத்தியாளர்கள், தற்போது அதிகளவு கொள்முதல் செய்து, கூடுதலாக நுால் இருப்பு வைக்க நினைக்கின்றனர்; வழக்கத்தைவிட, இருமடங்கு அதிகமாக நுால் வாங்குகின்றனர்.தமிழகத்தைவிட குஜராத்தில் கிலோவுக்கு 22 ரூபாய் நுால் விலை அதிகமாக உள்ளது; முன்பணம் செலுத்தினால் மட்டுமே நுால் வழங்குகின்றனர். அதனால், இதுவரை குஜராத்தில் கொள்முதல் செய்த பல ஆடை உற்பத்தி நிறுவனங்களும், தற்போது, உள்ளூரில் நுால் கொள்முதல் செய்கின்றன.இந்த காரணங்களாலேயே, நுாலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், தேவை அதிகரிப்புக்கு ஏற்ப, நுால் உற்பத்தியை அதிகரிக்க முடியாது. முன்பணம் செலுத்தினால் மட்டுமே, நுாற்பாலைகளுக்கு, ஜின்னர்கள், பஞ்சு வழங்குகின்றனர்.நுாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இச்சூழலில், கடனின்றி வர்த்தகம் செய்யும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, நுால் வழங்குவதில் நுாற்பாலைகள் முன்னுரிமை அளிக்கின்றன. உள்நாட்டிலேயே தேவை அதிகரித்துள்ளதால், விரும்பினாலும்கூட, ஏற்றுமதியில் ஈடுபட முடியாத நிலையிலேயே தமிழக நுாற்பாலைகள் உள்ளன.ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து அதிகளவு நுால் கெள்முதல் செய்ய வாய்ப்பு இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள நுால் தட்டுப்பாடு, தற்காலிகமானதுதான்; விரைவில் இந்நிலை சீராகிவிடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.முன்னணி ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:நுாற்பாலை துறையில், 100 கோடி ரூபாய் முதலீடு செய்தால், அந்த ஆண்டு, 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் ஈட்டலாம். ஆனால், ஆடை ஏற்றுமதியில், 10 கோடி ரூபாய் முதலீடு செய்து, 100 கோடிக்கு வர்த்தம் மேற்கொள்ளலாம். இது, யதார்த்தமான உண்மை.கொரோனா கால பாதிப்பு, வங்கி கடன், தவணை தொகைகள் செலுத்த வேண்டிய நிர்பந்தம், இதர பல்வேறு பிரச்னைகள் நுாற்பாலைகளை சூழ்ந்துள்ளன. தற்போதைய சூழலில், உள்நாட்டை விட, ஏற்றுமதியில், நுாலுக்கு 20 ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது.நுால் ஏற்றுமதி வாய்ப்பு என்பது, அரிதாக கிடைக்கும் ஜாக்பாட். வெளிநாட்டினர், தரத்தை மட்டும் உறுதிபடுத்தி நுால் வந்து சேரும் முன்னரே, தொகையை வழங்கி விடுகின்றனர். ஆனால், உள்நாட்டில், பல ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தாமதம் செய்கின்றனர்.ஏற்றுமதியில், 60 சதவீதம் கவனம் செலுத்தும் நுாற்பாலைகள், 40 சதவீத நுாலை, உள்நாட்டில், உரிய காலத்தில் தொகை வழங்கும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு நுால் கொடுக்கத்தான் செய்கின்றனர்.தொகை வழங்க தாமதித்த நிறுவனங்களுக்கு, உடனடியாக தொகை வழங்க முன்வந்தாலும்கூட நுால் வழங்குவதில்லை. இது, ஒரு சத்தியசோதனை தான்.தற்போது கடனுக்கு நுால் வழங்கினால்தான், முந்தைய கடன் தொகையை வழங்கும் மனநிலையில், சில ஆடை உற்பத்தியாளர்கள் உள்ளனர். கடனை பொருத்த வரை, இரு தரப்பினருக்கு மத்தியில், பல்வேறு சூழல்களை பொருத்து, கடன் வழங்குவதும், மறுக்கப்படுவதும் அமைகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தற்போது உருவாகியுள்ள இந்த அசாதாரண சூழல் குறித்து, பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்கள் குரல் எழுப்பாமல் அமைதி காப்பது கவலை அளிக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், ஒட்டுமொத்த பின்னலாடை துறையும் வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்பு கூட உருவாகி விடும்.நுாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இச்சூழலில், கடனின்றி வர்த்தகம் செய்யும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, நுால் வழங்குவதில் நுாற்பாலைகள் முன்னுரிமை அளிக்கின்றன. உள்நாட்டிலேயே தேவை அதிகரித்துள்ளதால், ஏற்றுமதியில் ஈடுபட முடியாத நிலையிலேயே தமிழக நுாற்பாலைகள் உள்ளன.நுால் ஏற்றுமதி வாய்ப்பு என்பது, அரிதாக கிடைக்கும் ஜாக்பாட். வெளிநாட்டினர், தரத்தை மட்டும் உறுதிபடுத்தி நுால் வந்து சேரும் முன்னரே, தொகையை வழங்கி விடுகின்றனர். ஆனால், உள்நாட்டில், பல ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தாமதம் செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X