திருப்பூர்:இலவச தையல் மெஷின் வழங்க, பயனாளிகளுக்கு தையல் பயிற்சி நேர்காணல் நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறை சார்பில், நடப்பு ஆண்டில், 25 பயனாளிகளுக்கு, இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தையல் மெஷின் இலவசமாக வழங்கப்படுகிறது.நடப்பு ஆண்டில், 35 பயனாளிகள், தையல் மெஷின் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில், தகுதியான, 25 பயனாளிகளுக்கு, நேற்று நேர்காணல் நடந்தது.கலெக்டர் அலுவலக வளாகத்தில், பயனாளிகள் தையல் மெஷினில் தைத்து காண்பித்து, நேர்காணல் நடத்தப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, பல்லடம் தொழில் கூட்டுறவு சங்க அலுவலர் மோகன்ராஜ், மேற்பார்வையாளர் குமரவேல் உள்ளிட்டோர், நேர்காணல் நடத்தி, பயனாளிகளை தேர்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE