மதுரை:மதுரையில் அத்தையால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 16 வயது சிறுமி, இன்று அதிலிருந்து மீள முடியாமல் அடிமையாகி உள்ளார். அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்தடுத்து 6 பிள்ளைகள் பிறந்தனர். இதில் 4வது பிள்ளைதான் 16 வயது சிறுமி. இவருக்கு 10 வயதாக இருக்கும்போது தந்தை இறந்து விட, பிள்ளைகளை பராமரிக்க தாய் சிரமப்பட்டார்.கணவரின் தங்கையான ஜெயலட்சுமி, 'என் பொறுப்பில் சிறுமியை வளர்க்கிறேன்' என்றுக்கூறி, 2 ஆண்டுகளாக வளர்த்தார்.12 வயதில் சிறுமி பூப்பெய்தியதும், அவரை தன் தொழிலான பாலியல் தொழிலுக்கு அழைத்துச்சென்றார்.
சிறுமியை பயன்படுத்தி ஒருமணி நேரத்திற்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் ஜெயலட்சுமி வசூலித்தார்.அதில் ரூ. 6 ஆயிரம் சிறுமிக்கு சம்பளமாக தந்து வந்துள்ளார். சிறுமி பணமும் கிடைத்ததால் அதுக்கு அடிமையாகவே ஆகிவிட்டார். இச்சூழலில்தான் போலீசார் ஜெயலட்சுமி உள்ளிட்டோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.சிறுமியிடம் விசாரித்த போது, தான் செய்து வந்தது தவறான தொழில் என்று குற்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாததை கண்டு போலீசார் வேதனை அடைந்தனர்.
பாலியலுக்கு அடிமையானவர் போன்ற மனநிலையில் இருக்கும் சிறுமியை ஒரு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர். அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE