பொது செய்தி

தமிழ்நாடு

பல்லடம் ரோட்டில் மேம்பாலம்: திட்ட அறிக்கை தயாரிப்பு தீவிரம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
திருப்பூர்:போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருப்பூர், பல்லடம் ரோட்டில் மேம்பாலம் அமைக்க, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.திருப்பூரின் முக்கிய வழித்தடமாக பல்லடம் ரோடு அமைந்துள்ளது. கோவை மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் வழித்தடமாகவும், நகரின் வளர்ச்சியடைந்த பகுதியாகவும் இருப்பதால், இந்த ரோட்டில் அபரிமிதமான போக்குவரத்து நெரிசல்
 பல்லடம் ரோட்டில் மேம்பாலம்: திட்ட அறிக்கை தயாரிப்பு தீவிரம்

திருப்பூர்:போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருப்பூர், பல்லடம் ரோட்டில் மேம்பாலம் அமைக்க, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.திருப்பூரின் முக்கிய வழித்தடமாக பல்லடம் ரோடு அமைந்துள்ளது. கோவை மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் வழித்தடமாகவும், நகரின் வளர்ச்சியடைந்த பகுதியாகவும் இருப்பதால், இந்த ரோட்டில் அபரிமிதமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக, புதிதாக பாலம் அமைக்க நெடுஞ்சாலை அதிகாரிகள் திட்ட வடிவமைப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில், சந்தைபேட்டை துவங்கி, சின்னக்கரை வரை, 5.4 கி.மீ., துாரத்துக்கு, தற்போதுள்ள ரோட்டுக்கு இணையாக, மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மண்பரிசோதனை, சர்வே, திட்ட அறிக்கை தயாரிக்க, 56 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நகரின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், பல்லடம் ரோட்டில், சந்தைப்பேட்டை துவங்கி சின்னக்கரை வரை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்து பயன்பாடு, பாலம் அமைக்கப்பட வேண்டிய நீளம் குறித்து சர்வே செய்யப்பட்டும், மண் பரிசோதனை செய்தும், உத்தேச வரைபட தயாரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X