பொது செய்தி

தமிழ்நாடு

உணவு வேஸ்ட் ஆகி விட்டதா கூப்பிடுங்கள்... 90877 90877!

Added : டிச 25, 2020
Share
Advertisement
* 'நோ புட் வேஸ்ட்' அமைப்பு உருவானது எப்படி?ஆரம்ப காலத்தில், பள்ளிகளுக்குச் சென்று, உணவை வீணாக்கக்கூடாது என, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். ஒரு சிறுமி கேட்ட கேள்வி யோசிக்க வைத்தது. 'விஷேசங்களுக்குச் சென்றால், வாழை இலையில் ஏராளமான உணவு வைத்திருக்கிறார்கள்; சமையல் கூடத்திலும் உணவு வகைகள் மீதமாகின்றன. அவற்றை பசியோடு இருப்பவர்களுக்கு
 உணவு வேஸ்ட் ஆகி விட்டதா கூப்பிடுங்கள்... 90877 90877!

* 'நோ புட் வேஸ்ட்' அமைப்பு உருவானது எப்படி?ஆரம்ப காலத்தில், பள்ளிகளுக்குச் சென்று, உணவை வீணாக்கக்கூடாது என, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். ஒரு சிறுமி கேட்ட கேள்வி யோசிக்க வைத்தது. 'விஷேசங்களுக்குச் சென்றால், வாழை இலையில் ஏராளமான உணவு வைத்திருக்கிறார்கள்; சமையல் கூடத்திலும் உணவு வகைகள் மீதமாகின்றன. அவற்றை பசியோடு இருப்பவர்களுக்கு கொடுத்தால், வாங்குவார்களா' என, அச்சிறுமி கேட்ட கேள்வியே, இந்த அமைப்பு உருவாக விதையாக இருந்தது.* உங்கள் முதல் தானம் பற்றி கூறுங்களேன்...?சிறுமியின் கேள்வியால் உந்தப்பட்டு, என் மொபைல் போன் எண்ணை, சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன். மறுநாள் போன் அழைப்பு வந்தது. நிகழ்வு நடந்த இடத்துக்குச் சென்றேன்; 52 உணவு பொட்டலங்கள் வழங்கினர். பெற்று வந்து அரசு மருத்துவமனை முன் இருந்த ஏழைகளுக்கு வழங்கினேன். அப்போது கிடைத்த உத்வேகத்தால், 2014, அக்., 16ல் உலக உணவு தினத்தன்று, 'நோ புட் வேஸ்ட்' என்கிற அமைப்பை உருவாக்கினோம்.* உணவை எவ்வாறு சேகரிக்கிறீர்கள்?திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், விசேஷங்களில் மீதமாகும் உணவையே சேகரிக்கிறோம். 90877 90877 என்ற எண்ணுக்கு அழைத்தால் போதும். உணவு அதிகம் இருந்தால், வாகனத்தில் சென்று சேகரிக்கிறோம். குறைவாக இருந்தால், கொண்டு வரச் செய்து, பசியோடு இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறோம்.* இதுவரை எவ்வளவு பேருக்கு உணவு வழங்கியிருக்கிறீர்கள்?மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் ஆதரவால், கோவை மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, மதுரை, தர்மபுரி, சென்னை, விஜயவாடா, ஐதராபாத் என, 14 நகரங்களில் செயல்பாடு விரிவடைந்துள்ளது. இதுவரை, 77 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கி, பசி போக்கியிருக்கிறோம்.* இலவசமாக உணவு கிடைப்பதால், சோம்பேறிகளை உருவாக்கி விடாதா?குப்பை கிடங்கை சுற்றி வசிப்பவர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், ஆதரவற்றோர், 'டென்ட்' அமைத்து வசிப்போர் என, வாழ்வாதாரத்தை அறிந்து, பசியோடு இருப்போருக்கு மட்டுமே வழங்குகிறோம்.* இதற்கெல்லாம் நிதி ஆதாரம் தேவையில்லையா?சமுதாய பொறுப்பு திட்டத்தில், சிலர் வாகனங்கள் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். டீசல், டிரைவர் சம்பள செலவு மட்டுமே. சில பெட்ரோல் பங்க்குகள் 'வவுச்சர்' தந்திருக்கின்றனர். தன்னார்வலர்கள் கொடுக்கும் நிதியுதவியால், டிரைவர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம்.* உங்கள் இயக்கத்தில், எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றனர்?அன்றாட பணிகளுக்கு இடையே, 300 பேர் கைகோர்த்து களப்பணி செய்கிறோம். பேரிடர் சமயங்களில், 9,000 பேர் எங்களுடன் இணைந்து சேவையாற்றுகின்றனர்.* வேறென்ன பணிகள் செய்கிறீர்கள்?பேரிடர் சமயத்தில், 'எமர்ஜென்சி கிச்சன்' உருவாக்கி, உணவு தயாரித்துக் கொடுக்கிறோம். ஊரடங்கு சமயத்தில், 16 நகரங்களில், 36 ஆயிரத்து, 500 குடும்பத்தினருக்கு சமையல் பொருட்கள் வழங்கினோம். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, 36 லாரிகளில், 288 டன் உணவு பொருட்கள் அனுப்பினோம். கேரளாவுக்கு, 70 டன் பொருட்கள் அனுப்பினோம்.* மத்திய - மாநில அரசுகள் அங்கீகாரம் செய்கின்றனவா?மாநில அரசு விருது, தேசிய விருது, காமன்வெல்த் விருது கிடைத்தது. ஐ.நா.சபை, வாடிகன் நகரம் மற்றும் ஹார்வர்டு பல்கலை, கேம்பிரிட்ஜ் பல்கலையில், உணவு வீணாவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி, பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.* அடுத்த 'பிளான்' என்ன?ஒரு வேளை உணவு ரூ.10 வீதம், 30 ரூபாய்க்கு மூன்று வேளை உணவு வழங்க உள்ளோம். நடமாடும் உணவகம் போல், தொழிலாளர்கள் மிகுந்த பகுதிக்கு கொண்டு சென்று, வழங்க இருக்கிறோம். இதற்காக, சமையல் கூடம் உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X