கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனிக்குழு: உயர்நீதிமன்றம் பரிந்துரை

Added : டிச 25, 2020
Share
Advertisement
மதுரை:நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனிக்குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரைத்தது.மதுரை பீபிகுளம் நேதாஜி ரோடு அருகே நீர்நிலையில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசிப்பதாகவும், காலி செய்யுமாறும் பொதுப்பணித்துறை 2018 ல் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அவர்கள், 'பல ஆண்டுகளாக வசிக்கிறோம். விதிகளை பின்பற்றாமல் நோட்டீஸ்

மதுரை:நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனிக்குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரைத்தது.

மதுரை பீபிகுளம் நேதாஜி ரோடு அருகே நீர்நிலையில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசிப்பதாகவும், காலி செய்யுமாறும் பொதுப்பணித்துறை 2018 ல் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அவர்கள், 'பல ஆண்டுகளாக வசிக்கிறோம். விதிகளை பின்பற்றாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எங்களுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை. நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்,' என மனு செய்தனர்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: ஆக்கிரமிப்புகள் ஒரே நாளில் முளைப்பதில்லை. நீர்நிலைகளை பொதுப்பணித்துறையினர் அடிக்கடி ஆய்வு செய்தால் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடமையை நிறைவேற்றுவதில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் அதிகம் தாக்கலாகின்றன.

நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணாகிறது.இதில் 581 பேர் ஆக்கிரமிப்பாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நோட்டீசிற்கு 2 வாரங்களில் விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். நான்கு மாதங்களில் காலி செய்துகொள்வதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மின்சாரம் மற்றும் பாதாளச்சாக்கடை இணைப்பை துண்டிக்க வேண்டும். இவர்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு குடிசை மாற்றுவாரிய இடம் அல்லது தகுந்த மாற்று இடம் வழங்க வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற திறம்பட நடவடிக்கை மேற்கொள்ள சரியான வழிகாட்டுதல், அமைப்பு இல்லாததை இது தெளிவுபடுத்துகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய், பொதுப் பணி, காவல்துறையினர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அக்குழு நீர்நிலைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அதன் செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்நீதிமன்றம் பரிந்துரைக்கிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X