மதுரை:எச்.ஐ.வி.,தொற்று ரத்தம் ஏற்றியதில் பாதித்த சாத்துார் பெண்ணிற்கு அலுவலக உதவியாளர் பணியை வரன்முறை செய்த தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டியது.
சாத்துாரைச் சேர்ந்த 23 வயது கர்ப்பிணிக்கு 2018 ல் அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக எச்.ஐ.வி., தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது.ரத்ததானம் அளித்த இளைஞர் தற்கொலை செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அப்பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, சாத்துார் அரசு மருத்துவ மனையில் அலுவலக உதவியாளர் பணி, பணிக்கு சென்றுவர டூவீலர் உட்பட பல நல உதவிகள் வழங்கப்பட்டன.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு மீண்டும் விசாரித்தது. அரசுத் தரப்பு, 'அலுவலக உதவியாளர் பணி வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி., மூலம்தான் மேற்கொள்ள முடியும். அப்பெண்ணிற்கு சித்தா மருந்துகள் வழங்கப்படும்,' என தெரிவித்தது.நீதிபதிகள்: பணிவரன்முறை செய்ததில் இந்நீதிமன்றம் திருப்தி கொள்கிறது. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றிய தமிழக அரசை பாராட்டுகிறோம், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE