கோவை:கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடக்கிறது.சலிவன்வீதி வேணுகோபால சுவாமி கோவிலில், வேணுகோபாலகிருஷ்ணருக்கு, நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மூலவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உற்சவ மூர்த்திக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினார். இன்று காலை 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.சென்னனுார் கரிவரதராஜபெருமாள், ராதாகிருஷ்ணர், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பெரிய கடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, உப்பாரவீதி கல்யாண வெங்கட்ரமண சுவாமி, தியாகிகுமரன் மார்க்கெட் கல்யாண வெங்கட்ரமணசுவாமி, பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள், சித்தாபுதுார் ஜெகன்நாத பெருமாள், ஒலம்பஸ் நரசிங்கபெருமாள், கோட்டைமேடு கரிவரதராஜபெருமாள், சிங்காநல்லுார் உலகளந்தபெருமாள், பச்சாபாளையம் தசாவதாரபெருமாள் கோவில்கள் மற்றும் கோவை சுற்றுப்பகுதியில் உள்ள, பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழாவும் சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE