கோவை:கோயம்புத்துார், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்க(காட்மா) பொதுக்குழு கூட்டம், சங்க தலைவர் சிவக்குமார் தலைமையிலும், பொதுச்செயலாளர் செல்வராஜ் முன்னிலையிலும், மசக்காளிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.கூட்டத்தில், மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பில், கோவையில் மூலப்பொருள் வங்கி அமைத்து, தொழில்முனைவோர்களுக்கு சில்லரை, மொத்த விற்பனையில் நியாயமான விலையில் வழங்கப்பட வேண்டும்.'ஜாப் ஆர்டர்'களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இடப்பிரச்னைக்கு தீர்வு காண, தொழிற்பேட்டைகள் அமைத்து, தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.குறுந்தொழில் முனைவோர்களுக்கு நெருக்கடி தரும், உள்ளாட்சி சட்டப்பிரிவுகளில் இருந்து குறுந்தொழில்களுக்கு, முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவ உதவிகள் வழங்குவதுடன், காப்பீட்டு திட்டம், ஓய்வூதிய திட்டங்களை குறுந்தொழில்முனைவோர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள், தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE