தமிழ்நாடு

வாழ்த்து வாபஸ்! லஞ்சப்புகார்கள் பெருகி விட்டதால் மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம்

Added : டிச 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை;'அவசரப்பட்டு வாழ்த்தி விட்டேன்; வாழ்த்து கடிதத்தை திரும்ப பெறுகிறேன்' என, மாநகராட்சி கமிஷனருக்கு, ம.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஒருவர், கடிதம் எழுதியுள்ளார்.கோவை மாநகராட்சியில், 2,000 சதுரடிக்குள் கட்டடம் கட்டுவதற்கு விண்ணப்பித்தால், மூன்று நாட்களுக்குள் வரைபட அனுமதி தரப்படுகிறது. 10 ஆயிரம் சதுரடிக்குள் கட்டுவதாக இருப்பின், கள ஆய்வு செய்து, விண்ணப்பத்தின்

கோவை;'அவசரப்பட்டு வாழ்த்தி விட்டேன்; வாழ்த்து கடிதத்தை திரும்ப பெறுகிறேன்' என, மாநகராட்சி கமிஷனருக்கு, ம.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஒருவர், கடிதம் எழுதியுள்ளார்.கோவை மாநகராட்சியில், 2,000 சதுரடிக்குள் கட்டடம் கட்டுவதற்கு விண்ணப்பித்தால், மூன்று நாட்களுக்குள் வரைபட அனுமதி தரப்படுகிறது.
10 ஆயிரம் சதுரடிக்குள் கட்டுவதாக இருப்பின், கள ஆய்வு செய்து, விண்ணப்பத்தின் உண்மைத்தன்மையை இறுதி செய்தபின், 10 நாட்கள் இடைவெளிக்குள் அனுமதி வழங்கப்பட்டது.மாநகராட்சிக்குரிய கட்டணம் செலுத்தினால் போதும்; வேறு யாருக்கும் எதற்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது. இம்முயற்சி, விண்ணப்பதாரர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது; 2,000 சதுரடிக்குள் வரைபட அனுமதி கேட்டால், வீடு தேடி உத்தரவு வருகிறது.லஞ்சம் வாங்காமல், வரைபட அனுமதி கிடைத்ததால், மாநகராட்சி நிர்வாகத்தை பாராட்டி, கமிஷனர் குமாரவேல் பாண்டியனுக்கு, ம.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி கடிதம் அனுப்பினார்.ஆனால், 2,000 சதுரடிக்கு மேலான அனுமதிக்கு, கமிஷனர் பார்வைக்கு செல்லும் நகரமைப்பு கோப்புகள், கடந்த சில வாரங்களாக கிடப்பில் போடப்படுகின்றன.
அதனால், ஏற்கனவே வழங்கிய பாராட்டுக் கடிதத்தை, திரும்ப பெற்றுக் கொள்வதாக, கடிதம் அனுப்பியிருக்கிறார்.அதில், 'மண்டலம் வாரியாக துணை கமிஷனர் ஆய்வு செய்தபோது, நிர்வாகம் நல்ல நிலைக்கு வந்தது. லஞ்சம் வாங்க அலுவலர்கள், அதிகாரிகள் பயப்பட்டனர். லஞ்சம் கொடுக்காமலேயே, மக்களுக்கு சேவை கிடைத்தது. தற்போது நிலைமை மோசமாகி வருகிறது. சதுரடி கணக்கில் லஞ்சம் தாண்டவமாடுகிறது' என குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக, மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, கடந்த சில வாரங்களாக, அலுவலகம் வருவதில்லை. கண்காணிப்பு இல்லாததால், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில், மீண்டும் லஞ்சம் தலைதுாக்க ஆரம்பித்து விட்டது.லஞ்ச ஒழிப்பு துறையினர், தங்கள் கண்காணிப்பை மாநகராட்சி அலுவலகம் பக்கம் திருப்ப வேண்டுமென, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Chennai,இந்தியா
25-டிச-202012:19:52 IST Report Abuse
CBE CTZN பேருராட்சியில் மற்றும் ஊராட்சிகளில் மாநகராட்சியை விட லஞ்சம் அதிகம்... உங்களுக்கு சந்தேகம் இருந்தால், திருச்சி ரோட்டில் ஒண்டிபுதூரை அடுத்துள்ள இ பேரூராட்சி அலுவலகத்தில் விசாரிக்கலாம்..
Rate this:
Cancel
25-டிச-202011:42:14 IST Report Abuse
Ram Pollachi அரசியல்வாதிகளின் ஆதரவு வாபஸ் இதை கேட்ட எங்களுக்கு வாழ்த்து வாபஸ் புதுமையா இருக்கே. லஞ்சம் வாங்காமல் அதிகாரி ஒழுக்கமாக இருந்திருந்தால் கோவை மிளிரும் நகரம் என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X