பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ கல்வி துணை இயக்குனர் அரசு மருத்துவமனையில் ஆய்வு

Added : டிச 25, 2020
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்டு வரும் ஜைகா திட்ட பணிகளை, மருத்துவ கல்வி துணை இயக்குனர் சபீதா, நேற்று ஆய்வு செய்தார்.கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு, தேசிய நகர்ப்புற திட்டத்தின் கீழ், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, (ஜைகா) ரூ.286 கோடி நிதியுதவி அளிக்க முன் வந்தது.இதனை பயன்படுத்தி,

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்டு வரும் ஜைகா திட்ட பணிகளை, மருத்துவ கல்வி துணை இயக்குனர் சபீதா, நேற்று ஆய்வு செய்தார்.கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு, தேசிய நகர்ப்புற திட்டத்தின் கீழ், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, (ஜைகா) ரூ.286 கோடி நிதியுதவி அளிக்க முன் வந்தது.இதனை பயன்படுத்தி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு தேவையான கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில், கட்டடத்துக்கு மட்டும், 110.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனை வளாகத்தில், ஏற்கனவே அவசர சிகிச்சை பிரிவு இருந்த இடத்தில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனால், அங்கிருந்த பழைய கட்டடங்களை இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜைகா திட்ட பணிகள் குறித்து மருத்துவ கல்வி துணை இயக்குனர் சபீதா, நேற்று ஆய்வு செய்தார்.மருத்துவமனை டீன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், டாக்டர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், சபீதா கேட்டறிந்தார். முன்னதாக, கோவை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்காக கட்டப்பட்டு வரும், கட்டடப்பணிகளையும் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X