பெ.நா.பாளையம்:''அ.தி.மு.க., - பா.ஜ., இடையே சுமுக உறவு நீடிக்கிறது,'' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை தடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகர் அருகே பா.ஜ., கவுண்டம்பாளையம் மண்டல் அலுவலகத்தை, அண்ணாமலை திறந்து வைத்தார். பின்னர், நிருபர்களிடம் கூறுகையில், ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்குள், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. உறவு சீராக உள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பல்வேறு நலத்திட்டங்களை, தமிழக மக்களுக்காக செயல்படுத்தி உள்ளார்.
அவர் மிக உயர்ந்த தலைவர். பொது வாழ்க்கைக்காக தங்கள் நேரத்தை ஒதுக்க தயாராக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அரசியலுக்கு வரலாம்,'' என்றார்.மாநில பொது செயலாளர் செல்வக்குமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாவட்ட பொது செயலாளர் தாமோதரன், மகளிர் அணி, மாநில செயற்குழு உறுப்பினர் மைதிலி வினோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE