ஊட்டி:நீலகிரியில், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஆண்டுதோறும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நடப்பாண்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு பிரபல ஓட்டல்கள் மற்றும் ரிசாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா விதிமுறை காரணமாக, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''கொரோனா தொற்று குறைந்து, சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர். புத்தாண்டு நிகழ்ச்சிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது, பிரிட்டனில் புதிய வைரஸ் தொற்று உருவெடுத்ததால், மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி ஓட்டல்கள், விடுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது கண்டறிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE