பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த 14ம் தேதி இரவு, மூலவர் அனுமதி பெறும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது.பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு

திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த 14ம் தேதி இரவு, மூலவர் அனுமதி பெறும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது.பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் என்ற மோகினி அலங்காரத்தில், அர்ச்சுண மண்டபத்தில் எழுந்தருளினார்.

வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை, 3:30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், 4:45மணிக்கு, ரத்தின அங்கியுடன் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.பின், ஆயிரங்கால் மண்டபம் அருகே, திருமாமணி மண்டபத்தில், நம்பெருமாள், ஆழ்வார்களுடன் எழுந்தருளி அருள்பாலிப்பார். இன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழித் திருநாள் துவங்குகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நேற்று மாலை, 6:00 மணி முதல், பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளிய பின், இன்று காலை 8:00 மணி முதல் பக்தர்கள், பரமபத வாசல் வழியாக செல்லவும், சுவாமி தரிசனத்துக்கும் அனுமதிக்கப்படுவர்.


200 அடி மாலை:



ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ராஜ கோபுரம், 236 அடி உயரம் கொண்டது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு, இந்த ராஜகோபுரத்துக்கு, நேற்று, 1,000 கிலோ பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட, 200 அடி நீளமுள்ள இரண்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X