அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அமைச்சர்கள் ஊழல் குறித்து வீடு வீடாக தி.மு.க., பிரசாரம்'

Added : டிச 25, 2020
Share
Advertisement
போத்தனுார்:''அமைச்சர்களின் ஊழல் குறித்து, தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்வர்,'' என, கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.தி.மு.க., சார்பில், மலுமிச்சம்பட்டியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பாரதி,சுந்தராபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற, தி.மு.க., சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடக்கின்றன. ஜன.,10

போத்தனுார்:''அமைச்சர்களின் ஊழல் குறித்து, தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்வர்,'' என, கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.தி.மு.க., சார்பில், மலுமிச்சம்பட்டியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பாரதி,சுந்தராபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற, தி.மு.க., சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடக்கின்றன. ஜன.,10 வரை, 16 ஆயிரம் கூட்டங்கள் நடத்தப்படும்.கிராம சபை கூட்டங்களுக்கு திரளான மக்கள் வருகின்றனர். இதுவே ஆட்சி மாற்றத்துக்கான அடையாளம்.அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்த, 97 பக்க பட்டியல், கவர்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X