பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலை பணி நியமனம் தற்காலிக பேராசிரியர்கள் எதிர்ப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
கோவை:அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களுக்கு, வேளாண் பல்கலையில் மாறுதல் பெற்று பணிமேற்கொள்ள, தற்காலிக பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அண்ணாமலை பல்கலையில் பணி நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் உதவி பேராசிரியர்கள், அங்குள்ள மாணவர் எண்ணிக்கை விகிதத்திற்கு அதிகமாக இருப்பதால், அங்கிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணிபுரிவதற்காக, மாறுதல் வழங்கும் திட்டம்

கோவை:அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களுக்கு, வேளாண் பல்கலையில் மாறுதல் பெற்று பணிமேற்கொள்ள, தற்காலிக பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை பல்கலையில் பணி நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் உதவி பேராசிரியர்கள், அங்குள்ள மாணவர் எண்ணிக்கை விகிதத்திற்கு அதிகமாக இருப்பதால், அங்கிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணிபுரிவதற்காக, மாறுதல் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இதற்கு தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பத்தாண்டுகளாக பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தற்காலிக பேராசிரியர்கள் கூறுகையில், 'தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தற்காலிக பேராசிரியர்களாக, 20க்கும் மேற்பட்ட துறைகளில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகிறோம். மாதந்தோறும், தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

முன்னுரிமை அடிப்படையில் எங்களுக்கே வேளாண் பல்கலை காலிப்பணியிடங்களை நிரப்புவதில் முன்னுரிமை வழங்க வேண்டும். அண்ணாமலை பல்கலையில் பணிநியமனம் செய்யப்பட்டு, கோவை வேளாண் பல்கலைக்கு மாறுதல் செய்யப்படுவது நியாயமல்ல.தமிழக அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.


துணைவேந்தர் விளக்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலை துணை வேந்தர் குமார் கூறுகையில்,''அண்ணாமலை பல்கலையிலிருந்து மாறுதல் வழங்குவது குறித்து ஒப்புதல் கேட்டு எனக்கு கடிதம் வந்துள்ளது. அவ்வளவு தான். இது குறித்து பல்கலை ஆட்சிக்குழு கூடி முடிவு செய்யும். தற்காலிக பணியாளர்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பல்கலை காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படலாம். அதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X