கிளப்புறாங்கய்யா...:உலகம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
நீர் யானையின் சேட்டைஇந்த வீடியோ முதலில் பார்க்கும்போது, இறந்து போன நீர் யானை தண்ணீரில் மிதப்பது போல் தோன்றும். ஆனால், வீடியோவை முழுவதும் பார்த்தால் தான், நீர் யானையின் சேட்டை நன்றாக புரியும். பூங்காவில் நீர் யானை வெயிலுக்கு இதமாய், இருப்பதற்காக இப்படி படுத்து துாங்கி கொண்டிருக்கிறது. மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீர் யானையின் சேட்டை

இந்த வீடியோ முதலில் பார்க்கும்போது, இறந்து போன நீர் யானை தண்ணீரில் மிதப்பது போல் தோன்றும். ஆனால், வீடியோவை முழுவதும் பார்த்தால் தான், நீர் யானையின் சேட்டை நன்றாக புரியும். பூங்காவில் நீர் யானை வெயிலுக்கு இதமாய், இருப்பதற்காக இப்படி படுத்து துாங்கி கொண்டிருக்கிறது. மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், இதற்கு கிண்டலான கமென்ட் பதிவிட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளியின் நல்ல மனம்

பிரேசில் தலைநகர், பிரேசிலியாவில் லியாண்ட்ரோ டா சில்வா என்ற மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்டி வருகிறார். இதற்காக, நகரும் பலகையில் அமர்ந்தவாறு சிக்னல்களில் காத்திருப்பவர்களிடம் நிதி திரட்டுகிறார். கொரோனா காலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு தன்னால் நிதி திரட்ட முடியவில்லை என கூறியுள்ள அவர், சாண்டா கிளாஸ் ஆடை நிதி திரட்ட உதவியாக இருக்கிறது என்கிறார். இவரது முயற்சி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பனியில் உற்சாக துள்ளல்

அமெரிக்காவின், நியூயார்க்கில் உறைபனிக்காலம் என்பதால், பார்க்கும் இடமெல்லாம் வெண்ணிறமாய் காட்சியளிக்கிறது. இந்நிலையில், புறநகரில், 3 அடி உயரத்திற்கு பனி தேங்கியிருந்தது. பனியின் மென்மையும், குளிர்ச்சியால் குஷியான குதிரை ஒன்று அந்த பனியில் உருண்டு புரண்டு துள்ளி குதித்து விளையாடுகிறது. இது வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.

சாப்பிட்டது 29; டிப்ஸ் 2020

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர், 29 டாலருக்கு சாப்பிட்டு விட்டு, அதற்கு டிப்சாக 2020 டாலரை வழங்கியுள்ளார். உணவு விடுதியின் மேலாளர் இந்தஆச்சரியமான வாடிக்கையாளர் பற்றி பேஸ்புக்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த வாடிக்கையாளர் கேட்டுக்கொண்டதின் பேரில், அந்த டிப்ஸை அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தலா, 80 டாலர் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வாடிக்கையாளர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த, 'டிப்ஸ்' வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X