சென்னை:அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சு, எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில், ஊழியர்கள் உள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதியம், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, ஒப்பந்த முறையில் நிர்ணயிக்கப்படுகிறது. 13வது ஊதிய ஒப்பந்த காலம், ௨௦௧௯ ஆகஸ்டில் முடிந்து விட்டது.செப்., முதல், 14வது ஊதிய ஒப்பந்தப்படி, ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை ஊதிய ஒப்பந்த பேச்சு துவங்கவே இல்லை.
இதற்காக, 2019அக்., 4ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி தலைமையில், 14 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை பேச்சு துவங்கவில்லை.இந்நிலையில், ஜன., 6ம் தேதிக்குள் ஒப்பந்த பேச்சை துவக்காவிட்டால், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய, தொழிற்சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன.
பொங்கல் பண்டிகை நெருங்க உள்ள நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், அது, பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். 'இதனால், பேச்சை விரைவில் துவங்க வேண்டும்' என, ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE