நைரோபி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புதிய வடிவிலான கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக உலகெங்கும் பெரும் பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.மிகவும் வேகமாக பரவக் கூடிய கொரோனா வைரசின் புது வடிவம் தென்பட்டுள்ளதாக பிரிட்டன் அறிவித்தது. இதையடுத்து அந்த நாட்டுக்கான அனைத்து விமான கப்பல் சேவைகளை உலக நாடுகள் நிறுத்தியுள்ளன.

தென்னாப்ரிக்காவிலும் மற்றொரு புது வடிவிலான கொரோனா தென்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. நைஜீரியாவில் இவற்றில் இருந்து வேறுபட்ட புதிய வடிவிலான கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளதாக அந்த நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
ஆப்ரிக்க கண்டத்தில் 25 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது உலக பாதிப்பில் 3.3 சதவீதம். அதே நேரத்தில் கடந்த நான்கு வாரத்தில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 10.9 சதவீதம் உயர்ந்துள்ளது. நைஜீரியாவில் பாதிப்பு பரவல் வேகம் 52 சதவீதமாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE