உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: 75 ஆண்டுகளுக்கும் மேலாக, 'திராவிடக் கொள்கை' என்ற பெயரில், தமிழக மக்களை திசை திருப்பி வந்த கட்சிகளை, புறக்கணிக்கும் காலம் வந்து விட்டது.
இந்தியாவில் உள்ள தென் மாநிலங்களைச் சேர்ந்தோர், திராவிடர் என, அடையாளப்படுத்துகின்றனர். தமிழகத்தைத் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில், 'திராவிடம்' என்ற வார்த்தை உச்சரிக்கப்படுகிறதா? அம்மாநிலங்களைச் சேர்ந்தோர், 'தமிழ் தான், எங்கள் ஆதி மொழி' என, பெருமை பொங்க கூறுகின்றனரா?
தமிழகத்தில் மட்டும் தான், 'திராவிடம்' என்ற பெயரை சொல்லி ஏமாற்றி வருகின்றனர். நம்மை அடிமையாக்கி கொடுமைப்படுத்திய ஆங்கிலேயருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர், ஈ.வெ.ரா., என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட, ஈ.வெ.ரா.,வின் கொள்கை தான், திராவிடம் என்பது. இந்த போலித்தனமான திராவிடக் கொள்கையால், தமிழகம் சீரழிந்தது. மாற்றத்திற்கான அறிகுறி தென்பட துவங்கி விட்டது.

ஜாதி, மதத்தால் பிரிவினை பேசுவோரின் பம்மாத்து வேலையெல்லாம், இனி எடுபடாது. பகுத்தறிவு பேசி, தேவாலயத்தில், 'கேக்' வெட்டியும்; மசூதியில் கஞ்சி குடித்தும், மக்களை ஏமாற்றி விடலாம் என்ற கனவு, இனி பலிக்காது. எனவே, புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நபர்கள், தயவு செய்து, திராவிடக் கொள்கையை பின்பற்றாதீர். என்ன பெயரில் வேண்டுமானாலும், கட்சியை துவங்குங்கள்; ஆனால் அதில், 'திராவிடம்' என்ற வார்த்தை மட்டும் வேண்டாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE