விழுப்புரம்,; வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து, தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் மேலாண்மை இயக்குநர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா கூறியதாவது,விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்க, திருத்தம் மேற்கொள்ள பெறப்படும் படிவம் 6,7,8 மற்றும் 8ஏ படிவங்கள், இரட்டை பதிவு ஆகியவற்றின் மீது உரிய கள விசாரணை நடத்தி முடிவுசெய்ய வேண்டும். 18 முதல் 19 வயது வரையுள்ள இளம் வாக்காளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும்.மாவட்ட எல்லையில் உள்ள வாக்குசாவடிகளில் இரட்டை பதிவுகள் இருந்தால் அவை கண்டறியப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில், நீக்கம் செய்ய வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.இதையடுத்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் படிவம் 6,7 ஆகியவை முறையாக முடிக்கபட்டுள்ளதா என்பதை நேரில் சென்று களஆய்வு செய்தார். கூட்டத்திற்கு முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2021 குறித்து விழிப்புணர்வு செய்த புகைப்பட கண்காட்சியை பார்வையாளர் ஷோபனா பார்வையிட்டார்.இந்த கூட்டத்தில், கலெக்டர் அண்ணாதுரை , மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE