சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடுகளைப் பிரித்து கடைக்குள் இறங்கி திருட்டு

Added : டிச 25, 2020
Share
Advertisement
அவலுார்பேட்டை,; அவலுார்பேட்டையில் ஓடுகளைப் பிரித்து கடைக்குள் இறங்கி பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.அவலுார்பேட்டையை சேர்ந்த பாலாஜி,50; இவர் அதே ஊரில் கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிச்சென்றார்.காலையில் கடை திறந்து பார்த்த போது கடையின் பின்னால், மேல்புறத்திலிருந்த

அவலுார்பேட்டை,; அவலுார்பேட்டையில் ஓடுகளைப் பிரித்து கடைக்குள் இறங்கி பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.அவலுார்பேட்டையை சேர்ந்த பாலாஜி,50; இவர் அதே ஊரில் கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிச்சென்றார்.காலையில் கடை திறந்து பார்த்த போது கடையின் பின்னால், மேல்புறத்திலிருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கடையில், பொருட்களை சரி பார்த்ததில் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள், கல்லாபெட்டியில் இருந்த 1500 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.கடை அமைந்துள்ள பகுதியின் பின்னால் உள்ள முத்தாலம்மன் கோவில் கோபுரத்தில் சிசிடிவி, கேமரா உள்ளது. இதை அறிந்த மர்ம நபர், காட்சிகள் பதிவாகாமல் இருக்க கேமராவை மேல் புறமாக மாற்றி திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.அவலுார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூங்காவனம் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X