உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே கால்வாயில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகன், 40; பாத்திர வியாபாரி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் வீட்டிலிருந்து சென்ற முருகன் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை திருவெண்ணைநல்லுார் சாலையில் பேரூராட்சி குப்பை சேமிப்பு கிடங்கு அருகே உள்ள கால்வாயில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று முருகனின் உடலை மீட்டு மதுபோதையில் கால்வாய் நீரில் விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE