தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மத்திய சங்க துணைத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மத்திய தலைவர் சடையன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மாயவேல், தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் தண்டபாணி, எம்.எல்.எப்., சிறப்புத் தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கான பணப் பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு பல ஆண்டுகளாக தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உட்பட பலகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்க ஓட்டுநர் செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., செயலாளர் திருமுருகன் வரவேற்றார். தொ.மு.ச., நடத்துனர் செயலாளர் சுப்ரமணியன், எம்.எல்.எப்., மத்திய சங்க இணைச் செயலாளர் சக்திகுரு, சி.ஜ.டி.யூ., தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.விடியலை நோக்கி நிகழ்ச்சிரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டில், தி.மு.க., சார்பில் விடியலை நோக்கி நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாண்டுரங்கன், பெருமாள் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், கொள்கை பரப்பு செயலாளர் செல்வேந்திரன் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜூ உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கால்நடை உதவி இயக்குனர் ஆய்வுஉளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம், எம்.எஸ்.தக்கா பகுதிகளில் 129 பயனாளிகளுக்கு இலவச ஆடு வழங்கும் திட்டத்திற்கு கால்நடை மருத்துவக் குழுவினர் டாக்டர் தமிழ்மணி தலைமையில் ஆடுகளை தேர்வு செய்யும் பணி நடந்தது. அப்போது, மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் தமிழரசு நேரில் ஆய்வு செய்தார். ஊராட்சி செயலாளர் முத்தையன், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஆர்ப்பாட்டம்கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார், செயலாளர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், பிரசவ வார்டுகளை விரிவாக்கம் செய்து கூடுதல் படுக்கை அறைகள், குடிநீர், சுகாதாரமான கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.முற்றுகைப் போராட்டம்கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்த முற்றுகைப் போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் தேவி தலைமை தாங்கினார். செயலாளர் அலமேலு, பொருளாளர் தனலட்சுமி, துணைத் தலைவர் சக்தி முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் வாலண்டினா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.சலவைத் தொழிலாளர்கள் மனுகள்ளக்குறிச்சி: தியாகதுருகம் நகரம் மற்றும் பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர் வசித்து வருகின்றோம். தியாகதுருகம் - உதயமாம்பட்டு சாலையில் உள்ள செப்பு குளத்தைச் சுற்றி கட்டடம் அமைத்து, மின்மோட்டார்களுடன் கூடிய டேங்க்குகள் பொருத்தி சலவை நிலையம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சலவைத் தொழிலாளர்கள் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.பட்டா வழங்கக்கோரி மனுகள்ளக்குறிச்சி: கடந்த 1988ம் ஆண்டு முதல், ராவத்தநல்லுார் காலனியில் 50 பேர் வீடு கட்டி, வசித்து வருகிறோம். வீட்டு வரி மற்றும் மின்சார வரி செலுத்தி வருகிறோம். ஆனால், எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பட்டா வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே, எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் ராவத்தநல்லுார் காலனி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.பாலம் கட்டித்தரக்கோரி மனுகள்ளக்குறிச்சி: பாவளத்தில் இருந்து பூட்டை செல்லும் சாலையின் குறுக்கே மணி நதி உள்ளது. பாவளம் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விளை பொருட்களை இவ்வழியாகக் கொண்டு செல்ல வேண்டும்.மழைக்காலங்களில் மணி ஆற்றில் தண்ணீர் செல்வதால் 10 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பூட்டை - பாவளம் சாலையில் மணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அடிப்படை வசதி கேட்டு மனுகள்ளக்குறிச்சி: விளாந்தாங்கல் சாலையில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.கழிவு நீர் கால்வாய் இன்றி, கழிவுநீர் சாலையில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் கடும் அவதிக்குள்ளாகிறோம். தெருக்களில் மின் விளக்கு வசதியும் இல்லை. எனவே, விளாந்தாங்கல் சாலை பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என விளாந்தாங்கல் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.நுாலகருக்கு பாராட்டு விழாசங்கராபுரம்: ஆலத்துார் கிராம கிளை நுாலகர் புஷ்பலதாவிற்கு நல் நுாலகர் விருது வழங்கப்பட்டது. இவருக்கு வாசகர் வட்டம் சார்பில் நடந்த பாராட்டு விழாவிற்கு, ஆவண எழுத்தர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். சுப்பராயன் வரவேற்றார்.மாவட்ட நுாலக அலுவலர் சுப்ரமணியன் நுாலக குடும்ப உறுப்பினர் திட்டத்தை தொடங்கி வைத்து விருது பெற்ற நுாலகரைப் பாராட்டி பேசினார்.பள்ளிகளில் டி.இ.ஓ., ஆய்வுசங்கராபுரம்: நெடுமானுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராஜா முகமது மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.தொடர்ந்து, பாரதி மெட்ரிக் பள்ளியில் அங்கீகாரம் புதுப்பித்தல் தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் பரமநத்தம் அரசு தொடக்க பள்ளியில் மேற்கொண்டார்.பட்டாவை ரத்து செய்ய கோரிக்கைகள்ளக்குறிச்சி: புதுமோகூர் கிராமத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி நத்தம் புறம்போக்கு இடத்தில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் மூலம் தனி நபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.தற்போது, அந்த இடம் ஊர் மக்களின் பயன்பாட்டிற்காக பள்ளிகள், ஊராட்சிக்குத் தேவையான கட்டடங்கள் கட்ட தேவைப்படுகிறது.எனவே, அந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என புதுமோகூர் கிராம மக்கள் சப் கலெக்டர் ஸ்ரீகாந்த்திடம் மனு அளித்தனர்.ஆலோசனைக் கூட்டம்கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் தொண்டர் படை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். அலுவலக செயலாளர் மலர் வண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநில நிர்வாகத்தின் அறிவுரையின்படி கள்ளக்குறிச்சி மாவட்ட தொண்டர் படை செயல்படுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE