பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நினைவு நாள்: அ.தி.மு.க.,வினர் மாலை அணிவிப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், அவரது சிலைக்கு, மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் ஞானவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணி மற்றும் நிர்வாகிகள்

கள்ளக்குறிச்சி; எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், அவரது சிலைக்கு, மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் ஞானவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆலத்துார்ஆலத்துார் பஸ் நிலையத்தில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., மற்றும் அண்ணாதுரை சிலைக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்தனர். கூட்டுறவு சங்க தலைவர் கல்பனா ஹரிகரன், மாவட்ட பிரதிநிதி சகாதேவன், கிளைச் செயலாளர்கள் ராமு, கோவிந்தராஜ், ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.சங்கராபுரம்நகர அ.தி.மு.க., சார்பில் கடைவீதியில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு நகர செயலாளர் நாராயணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் குசேலன், கோவிந்தசாமி, ராஜா, ஷாஜகான், பழனி, முத்துசாமி, ராஜமாணிக்கம், ராஜப்பா, பாசறை நிர்வாகிகள் விக்னேஷ், சிவா, செந்தில், பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.தியாகதுருகம்தியாகதுருகம் மேற்கு, கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவைத் தலைவர் வைத்திலிங்கம், நகர செயலாளர் ஷியாம்சுந்தர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, முன்னாள் நகர செயலாளர் ராஜி, மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.நிர்வாகிகள் அய்யம்பெருமாள், சாமிதுரை, பாலசுப்ரமணியன், ரமேஷ், ராஜகுரு, குமரவேல், ஜெயச்சந்திரன், பாலகிருஷ்ணன், மணிவண்ணன், குமார், சந்தோஷ், குமாரசாமி, பாண்டுரங்கன், பரியாஸ், வேல்நம்பி, பாலமுரளி கிருஷ்ணன், வேலுமணி, ஜெயபிரகாஷ், பலராமன், சங்கர், காமராஜ், ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.திருக்கோவிலுார்நகர அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் சுப்பு தலைமையில், கட்சியினர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ஜெயபாலன், பேரவை நகர செயலாளர் மணி, முன்னாள் தொகுதி செயலாளர் லட்சாதிபதி, வழக்கறிஞர்கள் உமாசங்கர், ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ரகோத்தமன், பாலாஜி, வார்டு செயலாளர்கள் சின்னத்தம்பி, திருமலை, அன்பரசு, அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சி நகரம்நகரம் சார்பில் ஊர்வலமாக சென்று, பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை சிலைகளுக்கு கட்சியினர் நகர செயலாளர் பாபு தலைமையில் மாலை அணிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்.பி., காமராஜ், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், நகரமன்ற முன்னாள் சேர்மன் பாலகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, ஜெ., பேரவைச் செயலாளர் ஞானவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.சின்னசேலம்சின்னசேலத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி, மவுன ஊர்வலம் நடந்தது.நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் நகர கட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் ஐம்பெருமாள், நகர செயலாளர் குணசேகரன், விழுப்புரம் முன்னாள் ஆவின் சேர்மன் விஜயகுமார், பாசறை செயலாளர் ரகேஷ், மாவட்ட நெசவாளர் சங்கத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.முக்கிய சாலை வழியாகச் சென்ற ஊர்வலம் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X