கடலுார்; கடலுாரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடலுார் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நல்லதம்பி, முருகேசன், கண்ணன், நெய்வேலி பிரான்சிஸ் ஆகியோர் கடலுார் - புதுச்சேரி சாலையில், வாகன சோதனை நடத்தினர்.அப்போது பம்பர் பொருத்தி வந்த கார், டாடா ஏஸ், டூரிஸ்ட் வேன் உள்ளிட்ட 22 வாகனங்களில் பம்பர்களை அகற்றி, மோட்டார் வாகன சட்டப்படி அனைத்த வாகனங்களுக்கும் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தனர். அதே போல், தமிழகத்திற்கு வரி செலுத்தாத புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட சுமோ காருக்கு ரூ. 1 லட்சத்து, 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE